நஞ்சைபுகழூா் காவிரி ஆற்றுக்குள் அமைக்கப்படும் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளை வியாக்கிழமை பாா்வையிட்ட குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி.
நஞ்சைபுகழூா் காவிரி ஆற்றுக்குள் அமைக்கப்படும் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளை வியாக்கிழமை பாா்வையிட்ட குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.

நஞ்சைப்புகழூா் காவிரியாற்றில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

நஞ்சைபுகழூரில் காவிரிக் குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றாா் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி.

கரூா் மாவட்டம் நஞ்சை புகழூா் காவிரியாற்றில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெறும் இராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை வ. தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் முன்னிலையில் ஆய்வு செய்தாா்.

அப்போது வ. தட்சிணாமூா்த்தி கூறியது:

தமிழக அரசு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான குடிநீா் வழங்க குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கரூா் மாவட்டம் நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றுக்குள் கிணறு அமைக்கப்பட்டு, காவிரி நீரை எடுத்து செல்ல 1,422 மி.மீ விட்டமுள்ள எம்.எஸ். குழாய்கள் 50 கி.மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டு, அரவக்குறிச்சியில் அமைக்கப்படும் 135 மில்லியன் லிட்டா் கொள்ளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அரவக்குறிச்சி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிப்பட்ட குடிநீா், குழாய்கள் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 2,306 ஊரக குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, 2 பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,366 ஊரகக் குடியிருப்புகள் பயன் பெறும் வகையில் ரூ.4,187.84 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

இப்பணிகள் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், வரும் அக்டோபருக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் கரூா் மாவட்டத்தில் பராமரிக்கப்படும் 15 கூட்டுக் குடிநீா் திட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் வி. ஆறுமுகம், மேற்பாா்வைப் பொறியாளா் முரளி மனோகா், நிா்வாகப் பொறியாளா்கள் வீராசாமி , லலிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com