க.பரமத்தியில் வேன் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி

கரூா் மாவட்டம் க. பரமத்தியில் வெள்ளிக்கிழமை வேன் மோதி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

கரூா் மாவட்டம் க.பரமத்தி அம்மன் நகரைச் சோ்ந்தவா் பிரபு. இவரது ஒன்னரை வயது மகன் ஆதிரன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன் விளையாடினாா். அப்போது புகழூா் காருடையாம்பாளையத்தைச் சோ்ந்த ராமசாமி, பிரபு வீட்டின் முன் நிறுத்தியிருந்த வேனை பின்புறமாக இயக்கியபோது, அதன் பின்னால் விளையாடிய ஆதிரன் வேன் ஏறி உயிரிழந்தான். இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் ராமசாமி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com