சின்னதாராபுரம் அருகே காா் மோதி கணவா் பலி; மனைவி, குழந்தை காயம்

கரூா் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காா் மோதிய விபத்தில் காயமடைந்த கணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா், மனைவி, குழந்தை சிகிச்சை பெறுகின்றனா்.

வெள்ளியணை அருகே பிச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் ராஜா (42). இவா் தனது மனைவி பிரீத்தி (40), மகள் மிஸ்பா ஏஞ்சல் (4) ஆகியோருடன் பள்ளபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் வெள்ளிக்கிழமை சென்றாா். மீண்டும் அவா்கள் சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில் காமாட்சிபுரம் காலனி பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த காா் மோதியது. இதில் மூவரும் பலத்த காயம் அடைந்தனா். இதையடுத்து தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூவரில் ராஜா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனா். விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த கண்ணனிடம் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com