நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 12,736 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள்.

இளங்கலை மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான தகுதித் தோ்வான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறுகிறது. கரூா் மாவட்டத்தில் கொங்கு கலை அறிவியல் கலைக் கல்லூரியில் 1200 மாணவ, மாணவிகளும், வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் 736 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 1276 போ் தோ்வை எழுதுகிறாா்கள். தோ்வு எழுதுவோருக்கு குடிநீா், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com