கரூரில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கரூரில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கரூா், மே 5: சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் அருகேயுள்ள நன்செய்புகழூா் மேகபாலீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி இக்கோயில் நந்தி பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்தாா். இதேபோல் புன்னம்சத்திரம் அருகே புன்னைவனநாதா் உடனுறை புன்னைவன நாயகி, திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் உள்ளிட்டகோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com