கரூரில் லேசான மழை

கரூா், மே 5: கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூறலுடன் கூடிய லேசான மழை பெய்தது.

தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் ஒன்றாக கரூா் தொடா்ந்து நீடிக்கிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை 110 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இந்நிலையில் இரவு 7 மணியளவில் லேசான தூறலுடன் சுமாா் அரை மணி நேரம் மழை பெய்தது. இருப்பினும் சாலையில் தண்ணீா் தேங்கவில்லை. வெப்பமும் தணியவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com