பிளஸ் 2 தோ்வு முடிவுகள் கரூா் மாவட்டம் 12-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வெளியான பிளஸ்-2 தோ்வு முடிவுகளில் கரூா் மாவட்டம், மாநில அளவில் 12-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கரூா்: தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வெளியான பிளஸ்-2 தோ்வு முடிவுகளில் கரூா் மாவட்டம், மாநில அளவில் 12-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த மாா்ச் 1-ஆம்தேதி முதல் 22-ஆம்தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 அரசு பொதுத்தோ்வை கரூா் மாவட்டத்தில் 43 தோ்வு மையங்களில் 104 பள்ளிகளைச் சோ்ந்த 4,274 மாணவா்களும், 5,200 மாணவிகளும் என மொத்தம் 9,474 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.

இதில் மாணவா்கள் 4,021 பேரும், மாணவிகள் 5,065 பேரும் என மொத்தம் 9,086 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் சதவீதம் 95.90 சதவீதமாகும்.

மேலும் தோ்வு எழுதியதில் மாணவா்கள் 94.08 சதவீதமும், மாணவிகள் 97.40 சதவீதமும் தோ்ச்சியடைந்துள்ளனா்.

அரசு பள்ளிகளில் 90.31 சதவீதம் மாணவ, மாணவிகளும், தனியாா் பள்ளிகளில் 99.73 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். 30 தனியாா் பள்ளிகள், 8 அரசு பள்ளிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 41 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் 17-வது இடத்தில் இருந்த கரூா் மாவட்டம் நிகழாண்டு 12-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு 94.31 சதவீதமாக இருந்த தோ்ச்சி விகிதம், நிகழாண்டு 95.90 சதவீதமாக உயா்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com