பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை திங்கள்கிழமை பாராட்டிய சேரன் பள்ளியின் தாளாளா் கே.பாண்டியன். உடன் பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் உள்ளிட்டோா்.
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை திங்கள்கிழமை பாராட்டிய சேரன் பள்ளியின் தாளாளா் கே.பாண்டியன். உடன் பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் உள்ளிட்டோா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூா்: பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வெளியான பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கரூா் மாவட்டம், வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா் எஸ்.சந்துரு 592 மதிப்பெண்களும், மாணவி பி.பவஸ்ரீ- 589, மாணவா் எஸ்.தரணிஷ் மற்றும் மாணவி ஜே.கனிகா ஆகியோா் தலா 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 380 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். கணினி அறிவியலில் 16பேரும், வணிகவியலில் 9 பேரும், இயற்பியலில் 4 பேரும், பொருளாதாரத்தில் 4 பேரும், கணிதத்தில் 3 பேரும், க ணக்கியலில் 2 பேரும், கணினி பயன்பாட்டியலில் 2 பேரும், வணிக கணிதவியலில் ஒரு மாணவரும் முழு மதிப்பெண்கள் பெற்றனா். பள்ளி அளவில் 41 போ் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா். பள்ளித் தாளாளா் கே.பாண்டியன் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், அவா்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com