அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பஞ்சா் ஒட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், மூலிமங்கலத்தை அடுத்த நல்லியம்பாளையத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (54). இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சா் ஒட்டும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை குப்புசாமி சேலம் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் புகழூா் மூலிமங்கலம் பிரிவு சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் குப்புசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து குப்புசாமி மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com