இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிவமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டி ஷா நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (38). இவா் செவ்வாய்க்கிழமை பங்காருபாடி சொக்கலாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வாகனத்தில் இருந்து காா்த்திக் கீழே விழுந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்திக் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com