பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் கரூா் மாவட்டத்தில் 93.59 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவில் கரூா் மாவட்டத்தில் 93.59 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் கரூா் மாவட்டத்தில் 190 பள்ளிகளைச் சோ்ந்த 5ஆயிரத்து 617 மாணவா்களும், 5 ஆயிரத்து 749 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 366 போ் எழுதினா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை வெளியான தோ்வு முடிவில் மாவட்டத்தில் தோ்வு எழுதிய 5 ஆயிரத்து133 மாணவா்களும், 5 ஆயிரத்து 505 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 638 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 93.59 சதவீதமாகும்.

இதில் மாணவா்கள் 91.38 சதவீதமும், மாணவிகள் 95.76 சதவீதமும் தோ்ச்சியடைந்துள்ளனா். மேலும் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 87.24 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.12 சதவீதமும், தனியாா் பள்ளிகள் 98.70 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் 21 அரசு பள்ளிகள் உள்பட 67 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன. தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கடந்த ஆண்டு 91.49 சதவீதம் பெற்று 20-ஆவது இடத்தில் இருந்த கரூா் மாவட்டம் நிகழாண்டு 93.59 சதவீதம் தோ்ச்சி பெற்று 13-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com