கடும் வெயில்: டிஎன்பிஎல் தொழிலாளி மயங்கிச் சாவு

கரூரில் நிலவும் கடும் வெப்பத்தால் டிஎன்பிஎல் தொழிலாளி சனிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அகிலாண்டபுரம் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் (51), புகளூா் டிஎன்பிஎல் காகித ஆலை ஊழியா். காகித ஆலை குடியிருப்பில் வசிக்கும் இவா் வியாழக்கிழமை பணிக்கு சென்று விட்டு மதியம் வீட்டில் வந்து சாப்பிட்டு பணிக்குச் செல்ல பைக்கை எடுத்தாா். அப்போது கடும் வெயிலால் கருப்பண்ணன் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து காகித ஆலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கரூா் தனியாா் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது கருப்பண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கருப்பண்ணனின் மனைவி கீதா அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் அவரின் சடலத்தை கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com