கருகும் வெற்றிலைப் பயிா்களை காக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கரூரில் வறட்சியயால் கருகும் வெற்றிலைப் பயிா்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்ற நிலையில், தற்போது குறைவான ஏக்கரில் அதன் சாகுபடி நடைபெறுகிறது.

மேலும் தற்போது வெயிலின் தாக்கத்தால் காவிரி ஆற்றில் குடிநீா் தேவைக்காக நீா் வரும் நிலையில் விவசாயத்துக்கு புகழூா் பாசன வாய்க்காலில் தண்ணீா் வராததால் வெற்றிலை பயிா் காய்ந்து கருகி வருகிறது. எனவே இந்தப் பயிரைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com