அரவக்குறிச்சி அருகே மயங்கி விழுந்து ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே நடந்து சென்றவா் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி அஜித் சாய்பு தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரஷீத் மகன் ஆரிப் அலி (57). இவருக்கு, கடந்த பல வருடங்களாகவே வலிப்பு நோய் இருந்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பள்ளப்பட்டி அருகே உள்ள ரங்கராஜ் நகா் பேருந்து நிறுத்தம் அருகே ஆரிப் அலி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தாா். அருகில் இருந்துவா்கள் உடனடியாக அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஆரிப் அலி மனைவி ஷா்மிளா அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com