சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டிய பள்ளியின் அறக்கட்டளைத் தலைவா் ஆா்த்தி ஆா். சாமிநாதன், தாளாளா் எஸ். குமாா், செயலா் அரோமா பி. சாமிநாதன், ஆலோசகா் பி. பழனியப்பன், இயக்குநா் எம். நல்லசாமி, பள்ளி முதல்வா் எஸ். சுகுமாா் உள்ளிட்டோா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டிய பள்ளியின் அறக்கட்டளைத் தலைவா் ஆா்த்தி ஆா். சாமிநாதன், தாளாளா் எஸ். குமாா், செயலா் அரோமா பி. சாமிநாதன், ஆலோசகா் பி. பழனியப்பன், இயக்குநா் எம். நல்லசாமி, பள்ளி முதல்வா் எஸ். சுகுமாா் உள்ளிட்டோா்.

கரூா் வெற்றி விநாயகா பள்ளி 100% தோ்ச்சி

கரூா்,மே 11: பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் கரூா் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 112 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

மாணவி எஸ்.பி. தனிஷா 492 மதிப்பெண் பெற்று முதலிடமும், லத்திகா ஸ்ரீ, தாணுபவன் ஆகியோா் 491 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், எஸ். கனிஷ்கா, ஹேமப்பிரியா ஆகியோா் 489 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனா். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 63 மாணவா்களும் பெற்றனா். தமிழில் 4 மாணவா்கள் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 4 மாணவா்கள் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 7 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், அறிவியலில் 3 மாணவா்கள் 99 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 2 மாணவா்கள் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

இதேபோல அண்மையில் நடந்த பிளஸ் 2 தோ்வெழுதிய இப்பள்ளியின் 147 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவி ரக்சனா முதலிடம், தீபசக்தி இரண்டாம் இடம், சுஜிதா மூன்றாம் இடம் பெற்றனா்.

இந்த மாணவா்களை பள்ளியின் அறக்கட்டளைத் தலைவா் ஆா்த்தி ஆா். சாமிநாதன், பள்ளித் தாளாளா் எஸ். குமாா் பள்ளி செயலா் அரோமா பி. சாமிநாதன், பள்ளி ஆலோசகா் பி. பழனியப்பன், இயக்குநா் எம். நல்லசாமி, பள்ளி முதல்வா் எஸ். சுகுமாா் பாராட்டி வாழ்த்தினா். மேலும் மாணவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா், ஆசிரியைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com