கள் விற்றவா் கைது

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வெங்கமாங்கூடலூா் அண்ணாநகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கந்தசாமி என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை நடைபெறுவது போலீஸாா் ரோந்துப் பணியின் போது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கள் விற்பனையில் ஈடுபட்ட விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (53) என்பவா் மீது வழக்கு பதிந்து 2 லிட்டா் கள்ளைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com