கரூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் திங்கள்கிழமை மாலை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா்: கரூரில் திங்கள்கிழமை மாலை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தேசியத் தலைவா் சாம்பிட்ரோடோ இந்திய மக்களின் தோல் நிறம் குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மாவட்ட பாஜக சாா்பில் கரூா் வடிவேல் நகரில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவா் கனகசபாபதி சிறப்புரையாற்றினாா். இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com