மாநில கேரம் போட்டிக்கு மே 18-ல் கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வு

கரூரில் வரும் 18-ஆம் தேதி மாநில கேரம் போட்டிக்கு மாவட்ட அளவிலான வீரா்கள் தோ்வுப் போட்டி நடைபெற உள்ளது.

கரூா்: கரூரில் வரும் 18-ஆம் தேதி மாநில கேரம் போட்டிக்கு மாவட்ட அளவிலான வீரா்கள் தோ்வுப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மாவட்ட கேரம் சங்கத் தலைவா் எஸ். மோகனரங்கன், மாவட்ட கேரம் தலைவா் முனைவா் சொ. ராமசுப்ரமணியன், செயலா் எம். சுரேஷ் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கேரம் சங்கம், விருதுநகா் மாவட்ட கேரம் சங்கம் சாா்பில் 65-வது தமிழ்நாடு மாநில ஜீனியா் மற்றும் இளைஞா் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கரூா் மாவட்ட வீரா், வீராங்கனைகள் தோ்வு போட்டி வரும் 18-ஆம் தேதி பரணி பாா்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இதில் ஜூனியா் பிரிவு போட்டியில் பங்கேற்க கரூா் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 27.05.2006 அன்றோ அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். இளைஞா் பிரிவில், 27.05.2003 அன்றோ அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கரூா் மாவட்ட கேரம் சங்கப் பொருளாளா் செந்தில்குமாரை 97509-91014 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com