அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு

தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருள்கள் திருடுபோனது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் வழக்கம்போல திங்கள்கிழமை மாலை வகுப்புகள் முடிந்தவுடன் பள்ளிக்கு பூட்டுப்போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றாா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்தபோது, பள்ளியின் கணினி லேப் அறையின் கதவை உடைத்து உள்ளே இருந்த 5 மடிக்கணினி, டிஜிட்டல் குரல் பதிவு கருவி உள்ளிட்ட ரூ.77ஆயிரத்து 865 மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com