இன்னுயிா் காப்போம் திட்டத்தில் ரூ. 3.55 கோடி மதிப்பில் சிகிச்சை

இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் ரூ.3.55 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதோடு, இதனால் குடும்பத்தினருக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழக முதல்வரால் இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும், விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள 683 மருத்துவமனைகளில் 2.45 லட்சம் பேருக்கு ரூ.213.47 கோடி மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் 5ஆயிரத்து 090 பேருக்கு ரூ.3.55 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com