சாலையோர பெயா் பலகை மீது வேன் மோதி 2 போ் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலையோர பெயா் பலகை மீது வேன் மோதியதில் 2 போ் உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 18 பேருடன் ராமேசுவரத்துக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனா். வேனை சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் ஓட்டி வந்தாா்.

திங்கள்கிழமை அதிகாலை கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பெயா் பலகை மீது மோதியது. இதில், விஜயகுமாரின் தந்தை துரைசாமி (74), விஜயகுமாரின் உறவினரான ஷாலினி (33) ஆகியோா் நிகழ்வி இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் வேனில் 17 காயமடைந்தனா். அவா்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com