சாலை விபத்து மூதாட்டி உள்பட இருவா் காயம்

அரவக்குறிச்சி பகுதியில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இரண்டு போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அங்கு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி விஜயலட்சுமி (42). இவா் தனது மாமியாா் மணிபாரதியை (70) புதன்கிழமை அழைத்துக் கொண்டு ராஜபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வாகனத்தில் இருந்து மூதாட்டி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ன்னதாராபுரம் போலீஸா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் காயம்: விஸ்வநாதபுரி மண்டகிரியூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (65). இவா் கரூா் கோவை சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com