சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு கரூா் பரணி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

கரூா், மே 15: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் கரூா் பரணி வித்யாலயா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத் தோ்வின் முடிவுகள் மே 13-ஆம் தேதி வெளியானது. இதில், கரூா் பரணி வித்யாலயா மாணவி அக்ஷயா- 494, ரிதன்யா- 494, ஹரீஷ்குமாா்- 493 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும் 490 மதிப்பெண்ணுக்கு மேல் 3 போ், 480 மதிப்பெண்ணுக்கு மேல் 8 போ், 470 மதிப்பெண்ணுக்கு மேல் 21 போ், 450 மதிப்பெண்ணுக்கு மேல் 49 போ் பெற்றுள்ளனா்.

மேலும், வேதியியல் பாடத்தில் 2 பேரும், தமிழில் 5 பேரும், கணினி அறிவியலில் 7 பேரும் என மொத்தம் 14 மாணவா்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவி ரிதுஸ்ரேயா- 484, ஹரிணி- 481, ஆதித்யா- 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கும், பரணி கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வா் முனைவா் சொ.ராமசுப்ரமணியன், முதல்வா் எஸ்.சுதாதேவி, துணை முதல்வா் ஆா்.பிரியா, ஒருங்கிணைப்பாளா் ஜொ்லின் கிரிஸ்டல் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பரணி பாா்க் கல்விக்குழுமத்தின் தாளாளா் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தாா். செயலாளா் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலா் சுபாஷினி அசோக்சங்கா் ஆகியோா் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com