கரூா் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

கரூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேல். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் கே.பிரபாகா் உள்ளிட்டோா்.

கரூா், மே 16: கரூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மீ. தங்கவேல் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை காலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேல் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் கே.பிரபாகா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com