கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூா், மே 16: கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

கரூா் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக மக்களை வெயில் வாட்டி வதைத்த நிலையில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைப்பாளையத்தில் 47.6 மி.மீ.மழை பதிவானது. மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழையின் அளவு(மி.மீட்டரில்)- கரூா்-34.2, அரவக்குறிச்சி-33.8, அணைப்பாளையம்-47.6, க.பரமத்தி-16, குளித்தலை-3, தோகைமலை-4, கிருஷ்ணராயபுரம்-4.8, மாயனூா்-4.6, பஞ்சப்பட்டி-3, கடவூா்-6, பாலவிடுதி-14.1, மைலம்பட்டி-2 என மொத்தம் 173.1மி.மீ. மழை பதிவானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com