வழக்குரைஞா்கள் போராட்டம்

Published on

கரூா் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியில் அண்மையில் ஆா்ப்பாட்டம் நடத்திய வழக்குரைஞா்களையும், சங்கச் செயலா் பழனிவேலையும் தாக்கிய உளுந்தூா்பேட்டை பட்டாலியன் காவலா் ஸ்ரீராம் மீது புகாா் கொடுத்த வழக்குரைஞா்கள் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தினா் பொய் வழக்கு பதிந்துள்ளதை கண்டித்து இப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி நீதிமன்றங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இப் போராட்டத்தால் நீதிமன்றங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com