கந்துவட்டி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் அடைப்பு
கரூா்: கந்துவட்டி கொடுமை வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த பாலவிடுதி சிங்கம்பட்டியைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (42). இவா் பணம் கொடுத்தவா்களிடம் பல்வேறு வட்டி வசூலித்து, பணம் தராதவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் செய்ததன்பேரில் திருவேங்கடத்தை பாலவிடுதி போலீஸாா், ஆக. 21-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், திருவேங்கடத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் திங்கள்கிழமை திருவேங்கடத்தை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.