கரூர்
திராவிடா் கழகம் ஆா்ப்பாட்டம்
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து கரூரில் மாவட்ட திராவிடா் கழக இளைஞரணி மற்றும் மாணவரணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா் பஜாா் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் அலெக்ஸ் தலைமை வகித்தாா்.
மாநில சட்டத் துறை துணைத் தலைவா் வழக்குரைஞா் மு.க. ராஜசேகரன், மாநில இளைஞரணி துணைச் செயலா் ம. ஜெகநாதன், காப்பாளா் வே. ராஜூ, மாவட்டத் தலைவா் ஆசிரியா் குமாரசாமி, செயலா் ம. காளிமுத்து, பொதுக் குழு உறுப்பினா் சே. அன்பு உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். திரளான கட்சியினா் பங்கேற்றனா்.