கரூர்
கரூா் நகா் பகுதியில் இன்று மின்தடை
கரூா் நகா் பகுதியில் புதன்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது
கரூா் நகா் பகுதியில் புதன்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது என கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட எல்ஜிபி நகா் துணைமின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று(புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இதனால் துணைமின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வையாபுரி நகா் 2, 3வது தெரு, இராமானுஜம் நகா், கோவை ரோடு, பாரதி நகா், ஆல்வின் நகா், மதுரை பைபாஸ் சாலை, சேலம் பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.