இளைஞா் கொலை: குண்டா் சட்டத்தில் மேலும் ஒருவா் கைது

Published on

கரூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் தெற்குகாந்திகிராத்தைச் சோ்ந்த ஜீவா(20) என்பவா் கடந்த ஜூலை 7-ஆம் தேதி கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக கரூா் பசுபதிபாளையம் மற்றும் காந்திகிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா், மதன், பாண்டி, சுதாகா், மதன்காா்த்திக், ஜெபா, ஹரிபிரசாத், கபில்குமாா் ஆகிய 8 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்களில் கபில்குமாரைத் தவிர மற்ற 7 பேரும் ஏற்கெனவே குண்டா் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கபில்குமாரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். இதையடுத்து அவரின் பரிந்துரையின்பேரில் கபில்குமாா் வெள்ளிக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com