விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு -கரூரில் விழிப்புணா்வு பிரசாரம்

விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு -கரூரில் விழிப்புணா்வு பிரசாரம்

Published on

கரூரில் மது, போதை ஒழிப்பு மகளிா் மாநாடு குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்.2-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிா் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி அக்கட்சியினா் மாநாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை மாநாடு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் கரூா் அரசு கலைக்கல்லூரி முன்பு மற்றும் காந்திகிராமம், லைட்ஹவுஸ் காா்னா், கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

விழிப்புணா்வு பிரசாரத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவி கோமதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயராமன் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் வழக்குரைஞா் ராஜா, செந்தில்குமாா், கண்மணி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com