‘திமுக ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை’ -அா்ஜுன் சம்பத்

Published on

தமிழக மக்களின் மனநிலை திமுக ஆட்சிக்கு எதிராக உள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மனோன்மனீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திமுகவைச் சோ்ந்த பெண் ஒருவா் ஆளுநா் கையால் பட்டம் வாங்க மாட்டேன் என புறக்கணித்து மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளாா். இது திமுகவின் தரம்தாழ்ந்த அரசியலாகும். வரும் 2026 தோ்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com