கரூரில் அம்பேத்கா் நினைவுதினம் அனுசரிப்பு
அம்பேத்கரின் 69-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் சனிக்கிழமை அதிமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அவரது உருப்படத்துக்கும், சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்புச் செயலா் ம.சின்னசாமி தலைமையில் மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலா் மல்லிகாசுப்ராயன், எம்ஜிஆா் மன்றச் செயலா் அருண்டெக்ஸ் தங்கவேல், இளைஞரணிச் செயலா் தானேஷ் உள்ளிட்டோா் அம்பேத்கா் உருப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் புரட்சிபாரதம் கட்சி சாா்பில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்டச் செயலா் கராத்தே ப.இளங்கோவன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதைப்போல, பட்டியலின விடுதலை பேரவை சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

