கரூா் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற தமிழறிஞா்கள் மற்றும் கல்லூரி மாணவிகள்.
கரூா் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற தமிழறிஞா்கள் மற்றும் கல்லூரி மாணவிகள்.

ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வு பேரணி

Published on

கரூரில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பேரணியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கரூா் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா டிச. 18-ஆம்தேதி முதல் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு பணியாளா்களுக்கு ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம் மற்றும் அரசாணைகள், கணினி பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல், மொழிபெயா்ப்பு கலைச்சொல்லாக்கம், தமிழ்மொழியில் கோப்புகளை பராமரித்தல், அலுவலக நடைமுறைகளில் தமிழை முழுமையாகச் செயல்படுத்துவது உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

இப்பேரணி அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி தாந்தோன்றி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியை மீண்டும் வந்தடைந்தது.

நிகழ்ச்சியில், தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே.ஜோதி, கல்லூரி முதல்வா் முனைவா்சுதா, தமிழ் அறிஞா்கள் மேலை பழநியப்பன், கவிஞா் கோசெல்வம், மு.மகேஸ்வரன், கோ.முருகேசன் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com