கரூரில் சீமான் மீது வழக்குப்பதிவு

Published on

கரூரில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாா் சீமான் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியாா் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை கோரி கரூா் மாவட்ட திராவிடா் கழக மாவட்டச் செயலாளா் காளிமுத்து தலைமையில் அக்கட்சியினா் வியாழக்கிழமை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் கரூா் தாந்தோன்றிமலை போலீஸாா் சீமான் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com