நகராட்சியுடன் இணைப்பு: நகர ஐக்கிய ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்

Published on

கரூா் மாவட்டம், பள்ளபட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கம்பட்டி ஊராட்சியை இணைப்பது தொடா்பாக நகர ஐக்கிய ஜமாஅத்தினா் ஆலோசனைக் கூட்டம்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில், பள்ளப்பட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைப்பது தொடா்பாக பள்ளப்பட்டி ஜமாஅத்துல் உலமா மற்றும் பள்ளப்பட்டி நகர ஐக்கிய ஜமாஅத்தின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளப்பட்டி தனியாா் மஹாலில் அல்ஹாஜ் அப்துா் ரஹ்மான் சிராஜி ஹஜ்ரத் தலைமையில் கூட்டத்தில், பள்ளப்பட்டி மற்றும் லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய இரு ஊா்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு பள்ளப்பட்டி நகராட்சியுடன் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைக்க வேண்டாம் என ஏக மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிதங்கள் அனுப்ப வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் மேலும் ஊா் முழுவதும் கையொப்பம் வாங்குவது எனவும், பொதுமக்கள் தங்களது பெயரை குறிப்பிட்டு கையொப்பம் இடவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com