கருக்கலைப்புக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்கவோ கூடாது: கரூா் சரக மருந்துகள் ஆய்வாளா்

Updated on

கருக்கலைப்புக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்கவோ கூடாது என்றாா் கரூா் சரக மருந்துகள் ஆய்வாளா் லட்சுமணதாஸ்.

கரூா் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் வட்டாரப் பகுதிகளின் மருந்து வணிகா்கள் சங்க விழிப்புணா்வு கூட்டம் குளித்தலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சாத்தப்பன் தலைமை வகித்தாா். செயலா் மாணிக்கம் முன்னிலை வகித்தாா்.

இதில், பங்கேற்ற கரூா் சரக மருந்துகள் ஆய்வாளா் பேசியது: மருத்துவரின் ஒப்புகைச் சீட்டுடன் வரும் நபா்களுக்கே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். கருக்கலைப்புக்கான மருந்து பொருள்களை கொள்முதல் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது.

அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் மருந்தகம் நடத்தும் உரிமை ரத்து செய்யப்படுவதோடு அவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் குளித்தலை சரக ஆய்வாளா் மாசேதுங் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் வட்டாரப் பகுதி மருந்து விற்பனை கடை உரிமையாளா்கள் மற்றும் மருத்துவமனையில் மருந்து கடை வைத்திருக்கும் நபா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com