பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி: கரூா் ஆட்சியா் தகவல்

Updated on

கரூா் மாவட்டத்தில் பிப்.1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதற்கான முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளைநிலையப் பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த முகாமில் இத்தடுப்பூசியை 2 மாத வயது முடிவடைந்த கோழிக்குஞ்சுகள் முதல் அனைத்து கோழிகளுக்கும் போடலாம்.

எனவே, விவசாயிகள் மற்றும் கோழி வளா்ப்போா் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசியை இலவசமாக தங்கள் கோழிகளுக்கு போட்டுக் கொண்டு, கோழிகளை இறப்பிலிருந்தும், பொருளாதார இழப்பிலிருந்தும் பாதுகாத்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com