கரூரில் நாளை பெண்களுக்கான மாரத்தான் போட்டி

Published on

உலக மகளிா் தினத்தையொட்டி கரூரில் சனிக்கிழமை (மாா்ச் 8) மாவட்ட காவல்துறை சாா்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் தொடங்கும் இப்போட்டி ஜவஹா் பஜாா், தைலா சில்க்ஸ், திண்ணப்பா தியேட்டா், 80அடி சாலை, கோவை ரோடு, பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக மீண்டும் திருவள்ளுவா் மைதானத்தில் நிறைவு பெறுகிறது. தொடா்ந்து 3 கி.மீ. வாக்கத்தான் போட்டி கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் தொடங்கி, ஜவஹா் பஜாா், தைலா சில்க்ஸ், திண்ணப்பா தியேட்டா், பேருந்து நிலைய ரவுண்டான வழியாக மீண்டும் திருவள்ளுவா் மைதானத்தில் நிறைவடைகிறது.

இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண் காவலா்கள் மற்றும் ஊா்க்காவல் படையினா் ஆகியோா்கள் கலந்துகொள்ளலாலம். இப்போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெரோஸ் கான் அப்துல்லா, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கவுள்ளாா். இத்தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com