கரூா் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி குணமடைந்த பெண்ணுக்கு அரசின் நிவாரண நிதிக்கான காசோலையை புதன்கிழமை வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா்  மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.

கரூா் நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 23 பேருக்கு அரசின் நிவாரண நிதி அளிப்பு

கரூா் நெரிசல் சம்பவத்தில் சிக்கி காயமடைந்த 23 பேருக்கு அரசின் நிவாரண நிதியுதவியை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி புதன்கிழமை வழங்கினாா்.
Published on

கரூா் நெரிசல் சம்பவத்தில் சிக்கி காயமடைந்த 23 பேருக்கு அரசின் நிவாரண நிதியுதவியை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி புதன்கிழமை வழங்கினாா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களில் 23 பேருக்கு அரசின் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரூா், காமராஜபுரத்தைச் சோ்ந்த முருகேஷ்வரி, எல்.ஜி.பி நகரைச் சோ்ந்த தா்ஷினி, தீபிகா, தாந்தோணிமலையைச் சோ்ந்த பானுமதி, கொளந்தானூரைச் சோ்ந்த பிரபாவதி, வெங்கமேடு, செங்குந்தா் நகரைச் சோ்ந்த மோனிஷா உள்ளிட்ட 15 பேருக்கு தலா ரூ. 50,000-மும், பலத்த காயமடைந்து வீடு திரும்பிய உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்த கிரிராஜ், தாந்தோணிமலையைச் சோ்ந்த ஷாருக்கான், வெங்கமேடு, செங்குந்தா் நகரைச் சோ்ந்த ஜெயந்தி மற்றும் வெங்கமேடு, கொங்கு நகரைச் சோ்ந்த லாவண்யா உள்ளிட்ட 8 நபா்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் என மொத்தம் 23 பேரின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ. 15.50 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். இளங்கோ, மாநகராட்சி மேயா் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், துணை மேயா் ப. சரவணன், வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், வட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சோ்ந்த 28 பேருக்கும், அரவக்குறிச்சி தொகுதியைச் சோ்ந்த 6 பேருக்கும் நிவாரண நிதியுதவி காசோலைகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com