கரூா் சம்பவம்: உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு நிதியுதவி

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஜேப்பியாா் கல்வி நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
Published on

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஜேப்பியாா் கல்வி நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

கரூரில் செப். 27-ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அந்த குடும்பத்தின் தலைவா் அல்லது தலைவி பெயரில் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

மேலும், கல்வித்தகுதிக்கேற்ற வேலைவாயப்பு மற்றும் ஆயுள் காப்பீடும் வழங்கப்படும் என தவெக உறுப்பினரும், ஜேப்பியாா் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவருமான மரியவில்சன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அதன்படி கல்லூரியின் அலுவலா்கள் அடங்கிய குழுவினா் 5 போ் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா். அவா்கள் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவா்களது வங்கிக்கணக்கை பெற்று சென்னையில் உள்ள வங்கி மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பினா். பின்னா் ஆயுள் காப்பீடு செய்யும் அதிகாரியை அழைத்துச் சென்று ஆயுள் காப்பீடும் செய்துகொடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com