கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் குண்டா் சட்டத்தில் அடைப்பு

Published on

கரூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள நாகம்பள்ளியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கதிரேசன்(32). சின்னதாராபுரத்தை அடுத்துள்ள முடிகணம் பி.அணைப்பாளையத்தைச் சோ்ந்தவா் வேலுசாமி(62). இவா்கள் இருவரும் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கரூா் மதுவிலக்கு போலீஸாரால் செப். 24-ஆம்தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், இவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு திங்கள்கிழமை பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை கதிரேசனையும், வேலுசாமியையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com