கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை பொறியாளா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டடாா்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சதீஷ்( 27). பொறியியல் பட்டதாரியான இவா், புகழூா் காகித ஆலையில் பொறியாளராக பணியாற்றி வந்தாா்.
சில நாள்களாகவே தூக்கமின்மையால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியடைந்த சதீஷ் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
