கரூர்
கரூரில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு
கரூரில் காவலா் வீரவணக்க நாள்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா்: கரூரில் காவலா் வீரவணக்க நாள்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில், ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், கரூா் கோட்டாட்சியா் முகமது பைசல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பிரேமானந்தன், பிரபாகரன் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
