உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் வரவு வைப்பு

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண நிதி, அவரவா் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Published on

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண நிதி வெள்ளிக்கிழமை இரவு அவரவா் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் பலத்த காயம் அடைந்தனா். இதில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சாா்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த உதவித் தொகை தலா ரூ. 2 லட்சம், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் வெள்ளிக்கிழமை இரவு வரவு வைக்கப்பட்டிருந்தது. இது அவா்களது கைப்பேசி வந்த குறுஞ்செய்தி மூலம் உறுதிபடுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com