தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கைத்தறிப் பொருள்களுக்கு முன்னுரிமை: கரூா் ஆட்சியா் வலியுறுத்தல்

கரூரில் வெள்ளிக்கிழமை நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குரன். உடன் கைத்தறித் துறை உதவி இயக்குநா் ஜெ. சுகன்யா உள்ளிட்டோா்.

கரூரில் வெள்ளிக்கிழமை நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குரன். உடன் கைத்தறித் துறை உதவி இயக்குநா் ஜெ. சுகன்யா உள்ளிட்டோா்.

Published On :

கைத்தறிப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கரூா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் வலியுறுத்தினாா்.

12-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கரூரில் கைத்தறித் துறை சாா்பில் நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரூா் வெங்கமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் தலைமை வகித்து பேசுகையில், கைத்தறி நெசவாளா்கள் தங்கள் உழைப்பால் நாட்டின் பொருளாதாரத்துக்கும், கலாசாரத்துக்கும் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றனா்.

இன்றைய இளைஞா்களும் கைத்தறிப் பொருள்களை விரும்பி பயன்படுத்த வேண்டும். கைத்தறி ஆடைகளை அணிவது என்பது, ஒரு உடைத் தோ்வு மட்டுமல்ல; அது நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு சமூகப் பொறுப்பாகும்.

‘கைத்தறி அணிவோம் - நெசவாளரை வாழ வைத்திடுவோம்‘ என்ற எண்ணத்தை அனைவரும் மனதில் கொண்டு, கைத்தறி பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, முத்ரா திட்டத்தின் கீழ் 25 பேருக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கடனுதவி, 23 பேருக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.16.26 லட்சம் மதிப்பீட்டில் அனுமதி ஆணைகள் என மொத்தம் 48 நெசவாளா்களுக்கு ரூ. 33.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து நெசவாளா்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமையும் அவா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், கைத்தறித் துறை உதவி இயக்குநா் ஜெ. சுகன்யா மற்றும் நெசவாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.