சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன். 5ம் தேதி இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து, வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

     ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி ஜூன். 5ம் தேதி  காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சி பெற ஆர்வம் உள்ள விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

     எனவே, பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் முகவரியை நேரில் அல்லது 04328 293592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai