Enable Javscript for better performance
சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

    By பெரம்பலூர்,  |   Published on : 20th October 2013 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி அக். 23, 24-களில் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருஙகிணைப்பாளர் பி. வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களான சின்ன வெங்காயம் மற்றும் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பயிர்களில் பூச்சி, நோய் உள்ளிட்ட பல காரணிகளால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அக். 23-ம் தேதி சின்ன வெங்காய சாகுபடி நுட்பங்கள், 30-ம் தேதி எலுமிச்சை சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.    சிறிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை பயிர்களின் நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து காணொளிக் காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் நேரடியாகவோ அல்லது 04328-293251, 293592, 9790491566 ஆகிய எண்ணிலோ தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்து பயன் பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai