Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு அக். 28-ல் தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு அக். 28-ல் தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி

    By பெரம்பலூர்  |   Published on : 25th October 2013 01:35 AM  |   அ+அ அ-   |    |  

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், அக். 28-ம் தேதி அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து, மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. வெங்கடேசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் அக். 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.  இப்பயிற்சியில், அசோலாவை உற்பத்தி செய்யும் முறை, தீவன பயன்பாடு, விஞ்ஞான முறையில் சமச்சீர் தீவனம் தயாரிக்கும் முறை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.   இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வேளாண் அறிவியல் மையத்தை 04328-293251, 293592, 292365 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு,  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai