பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் மகேந்திரன் (32). இவருக்கு கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நோயால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் நாள்தோறும் குடித்துவிட்டு சென்றதால், அவரது தந்தை சின்னசாமி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகேந்திரன் வியாழக்கிழமை தூக்
கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சித்தளி கிராம நிர்வாக அலுவலர் செல்வம் அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
பெரம்பலூர் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் கலியமூர்த்தி (39).
இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், நாள்தோறும் அவரது மனைவி மாலதியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். இந்நிலையில், கலியமூர்த்தி குடித்துவிட்டு மாலதியிடம் தகராறில் ஈடுபட்டதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கலியமூர்த்தி, அவரது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு காவல் நிலைய ஆய்வாளர் எம். சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.